தள்ளிப்போகும் குரூப் தேர்வு முடிவுகள்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..

By Thanalakshmi V  |  First Published Sep 29, 2022, 5:18 PM IST

குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம்( TNPSC ) அறிவித்துள்ளது.
 


குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம்( TNPSC ) அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:லஞ்சமாக 20 ஆயிரம் கேட்ட உதவி பொறியாளர்.. ? வித்தியாசமான போராட்டத்தில் இறங்கிய பாமகவினர்

கடந்த ஜூலை 24 ஆம் தேதி 7,138 காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 4  தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகளும் டிசம்பர் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:ஹீரோயிசத்திற்காக வௌவால்களாக மாறும் புள்ளிங்கோ இளைஞர்கள்: பயணிகள் அச்சம்

click me!