நடிகர் சூரியின் ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்

By Dinesh TG  |  First Published Sep 29, 2022, 3:35 PM IST

நடிகர் சூரி நடத்தி வரும் ஓட்டல்களில் அண்மையில் நடத்தப்பட்ட வணிக வரித்துறை சோதனையில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது, அது முழுக்க முழுக்க துறை ரீதியாக நடத்தப்பட்ட ஒன்று என்று வணிக வரித்துறை அமைச்சர்  மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.


மதுரை ஒத்தக்கடையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் விழாவில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பயனாளர்களுக்கு உபகரணங்களை வழங்கிய அமைச்சர் மூர்த்தி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் நூறு சதவிகிதம் அவர்களுக்கு கிடைக்கும் வகையில் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

ஓசி டிக்கெட் வேண்டாம்.. இந்தா காசு.. நடத்துநரை அலறவிட்ட மூதாட்டி

போலி பத்திர பதிவுகளை ரத்து செய்யும் சட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரி திட்டம். இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலங்களில் போலி பதிவுகள் குறித்து புகார் அளித்தால் அதை ரத்து செய்வதற்குண்டான பணிகள் உடனே மேற்கொள்ளப்படும். இதுவரை பதியப்பட்ட போலி பதிவுகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படும். இனி போலி பதிவுகளை மேற்கொண்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும் நடிகர் சூரி நடத்தி வரும் ஓட்டல்களில் அண்மையில் நடத்தப்பட்ட வணிக வரித்துறை சோதனை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அமைச்சர் அந்த ஓட்டல்களில் ஜிஎஸ்டி சேர்க்காமல் பில் செய்யப்படுவதாக புகார் எழுந்தது, அதன் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக ஓட்டல் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் நாங்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்து அதனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.

நாட்டில் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆர்எஸ்எஸ் தான் காரணம் - திருமா கண்டுபிடிப்பு

இது லாப நோக்கத்திற்காக செய்யப்படுவது கிடையாது, இனிவரும் காலத்தில் தனியாக ஜிஎஸ்டி குறிப்பிட்டு பில் செய்வதாக விளக்கம் அளித்துள்ளனர். மேலும் வணிக வரித்துறை சோதனை என்பது முழுக்க முழுக்க துறை ரீதியாக நடத்தப்பட்ட ஒன்றுதான். அதில் எந்தவித உள்நோக்கமோ, அழுத்தமோ கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், நடப்பு நிதியாண்டில் தற்போது வரை மட்டும் வணிக வரித்துறையில் 66 ஆயிரம் கோடியும், பதிவுத்துறையில் 8 ஆயிரம் கோடியும் என மொத்தம் 74 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. இந்த நிதியாண்டுக்குள் இரண்டு துறைகளும் சேர்த்து மொத்தம் 1.50 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து உள்ளோம்" என தெரிவித்தார்.

click me!