தமிழகம் முழுவதும் குழந்தைகள், பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரவி வந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியில் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அண்மை காலமாக பள்ளி மாணவர்கள், குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல் பரவத் தொடங்கியது. காய்ச்சல் காரணமாக புதுச்சேரியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் காய்ச்சல் கட்டுப்பாட்டில் இருப்பதால் விடுமுறை விட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
ஓசி டிக்கெட் வேண்டாம்.. இந்தா காசு.. நடத்துநரை அலறவிட்ட மூதாட்டி
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பரமசிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவரது மூத்த மகள் தங்கவேணி (வயது 12) இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மூன்று நாட்களாக தங்கவேணி காய்ச்சல் மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டதால் பள்ளிக்கு செல்லவில்லை. இதையடுத்து பெற்றோர் தங்கவேணிக்கு மூலைக்கரைப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டாலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான சிகிச்சை வழங்க முடியாத காரணத்தால் தங்கவேணி மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென சிகிச்சை பலன் இன்றி மாணவி உயிரிழந்தார்.
திருச்செந்தூரில் பக்தரின் பணப்பையை பத்திரமாக ஒப்படைத்த உத்தமர்
ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும் மர்ம காய்ச்சல் என்பதால், பிற மாணவிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் பெற்றோர் உள்ளனர்.