10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. இதை மட்டும் பண்ணிடாதீங்க.. அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு !

By Raghupati R  |  First Published May 3, 2022, 12:29 PM IST

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை மறுநாள் தொடங்க உள்ளது. அதன்படி 12 ஆம் வகுப்புக்கு வரும் 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்புக்கு, வரும் 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், 10 ஆம் வகுப்புக்கு வரும் 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெளியாகும் என்றும், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 23 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 7 ஆம் தேதியும் வெளியாக உள்ளன. இந்நிலையில், பொதுத் தேர்வு தொடர்பாக அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, '10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத் தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத் தேர்வின் போது மின் தடை ஏற்படக் கூடாது. பொதுத் தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும் பழுதடைந்திருந்தால் உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

இதையும் படிங்க : Gold Rate Today : அட்சய திருதியை முன்னிட்டு அதிரடியாக குறைந்த தங்க விலை..அடேங்கப்பா.! இவ்வளவு தானா ?

இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !

click me!