கடந்த வாரம் கார்த்திகாவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்பின்னர் அவரை தாய் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது இன்று அதிகாலை வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில், கர்ப்பிணியான கார்த்திகா மற்றும் அவரது தயார் காளியம்மாள் இருவரும் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி கார்த்திகா, தாய் காளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
undefined
தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் 3வது பகுதியில் வசித்து வருபவர் முத்துராமன். இவரது மனைவி காளியம்மாள். இந்த தம்பதிக்கு கார்த்திகா என்ற மகள் உள்ளார். இந்த பெண்ணை விளாத்திக்குளம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
கர்ப்பிணி பலி
இந்நிலையில், கடந்த வாரம் கார்த்திகாவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்பின்னர் அவரை தாய் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது இன்று அதிகாலை வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில், கர்ப்பிணியான கார்த்திகா மற்றும் அவரது தயார் காளியம்மாள் இருவரும் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
சோகத்தில் பொதுமக்கள்
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் வசித்து வந்த வீடு 50 ஆண்டுகள் பழமையானது. கான்கிரீட் வீட்டின் மேற்கூரை பகுதியில் பழைய ஓடுகள் வைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஈரநிலையில் ஓடுகள் இருந்த சூழலில் மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.