தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்தவர் வைகுண்ட பாண்டியன் (எ) வைகுண்டம். இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இவரது பிறந்தநாள் கடந்த பிப்ரவரி 23ம் தேதி அவரது நண்பர்கள் மற்றும் சகாக்களின் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டத்தில் பிரபல ரவுடி வைகுண்ட பாண்டியனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போலீஸ் எஸ்ஐ மற்றும் தனிப்பிரிவு காவலர் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ரவுடி பிறந்தநாள் கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்தவர் வைகுண்ட பாண்டியன் (எ) வைகுண்டம். இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இவரது பிறந்தநாள் கடந்த பிப்ரவரி 23ம் தேதி அவரது நண்பர்கள் மற்றும் சகாக்களின் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.
வைரலான புகைப்படம்
இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தகுமார், சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணி ஆகியோரை வைகுண்ட பாண்டியன் (எ) வைகுண்டம் சால்வை அணிவித்து கேக் ஊட்டி வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின.
ஆயுதப்படைக்கு மாற்றம்
இந்நிலையில், பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணியன் ஆகிய இருவரையும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.