மின்வெட்டு வருமா? தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களில் மின்உற்பத்தி நிறுத்தம்? என்ன காரணம்

By Pothy RajFirst Published Mar 13, 2022, 2:39 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள மேட்டூர், தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி வராத காரணத்தால், தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

தமிழகத்தில் உள்ள மேட்டூர், தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி வராத காரணத்தால், தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஒடிசாவிலிருந்து நிலக்கரி இன்னும் வராததால், இரு அனல்மின் நிலையங்களும் தற்காலிகமாக உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன..இருஅனல் மின்நிலையங்களிலும் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின்பகிர்மான கழக அதிகாரிகள் தரப்பில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ ஒடிசாவிலிருந்து வரவேண்டிய நிலக்கரி வரவில்லை. இந்த இரு அனல் மின்நிலையங்களும் இயங்குவதற்கு ஒடிசா நிலக்கரி மட்டும்தான் ஆதாரம். அங்கிருந்து நிலக்கரி வரவில்லை. ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் ஏராளமான நிலக்கரி குவிந்து கிடக்கின்றன. ஆனால், அதை கப்பலில் ஏற்றுவதில்தான்சிக்கல் நிலவுகிறது. ஏனென்றால், துறைமுகத்தில் நீண்டதொலைவுக்கு சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் கப்பல்கள் வரிசையாக நிற்கின்றன இதனால், தமிழகத்துக்கு வரும் நிலக்கரி கொண்டுவரும் கப்பலில் நிலக்கரியை ஏற்றமுடியவில்லை” எனத் தெரிவித்தார்

தமிழகத்தில் 5 அனல் மின்நிலையங்கள் உல்ளன. 5 அனல்மின்நிலையங்களுக்கும் 60ஆயிரம்டன் நிலக்கரி தேவை.ஆனால் 30ஆயிரம்டன் நிலக்கரி மட்டுமே வந்துள்ளது. 

நிலக்கரி தட்டுப்பாடு கடுமையாக இருப்பதாலும், இருப்பு வைக்க முடியாததாலும் உரிய அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியாமல் மின்நிலையங்கள் தடுமாறுகின்றன. இதனால், மின்வெட்டு வரும் சூழல் இருக்கிறது. இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய வெளிமாநிலத்திலிருந்து தனியார் நிறுவனங்களிடம் நிலக்கரி கொள்முதல் செய்யலாம் ஆனால், மிகப்பெரிய சுமையாக மாறிவிடும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
கோல் இந்தியா நிறுவனத்துடன் டான்ஜெட்கோ நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தம் செய்தபோதிலும், சுரங்கம் அமைந்துள்ள பகுதிகளில் கடுமையான மழை காரணமாக நிலக்கரி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 5 அனல்மின்நிலையங்கள் மூலம் 4200 மெகா வாட் மின்சாரம்உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, அனல்மின் நிலையங்களை தற்காலிகமாக மூடும் நிலை ஏற்படுகிறது. இதனால், மின் உற்பத்தி பாதி்க்கப்பட்டால் மக்கள் மின்வெட்டை சந்திக்க வேண்டியதிருக்கும். மின்வெட்டை சரிசெய்ய தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்தாலும் அது தமிழக அரசுக்கு சுமையாக அமையும்.

click me!