Earl Municipality : ஏரல் பேரூராட்சியில் சுவாரஸ்ய நிகழ்வு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன், மகள் வெற்றி.!

By vinoth kumar  |  First Published Feb 23, 2022, 10:40 AM IST

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெற்று உள்ளன. 


ஏரல் பேரூராட்சியில் அமமுக போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் வெற்றி பெற்றுள்ளது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெற்று உள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றிருப்பது தமிழகம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 

Tap to resize

Latest Videos

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சியில் அமமுக சார்பில் 1வது வார்டு, 2வது வார்டு, மற்றும் 15வது வார்டில் அப்பா, மகன், மற்றும் மகள் மூவரும் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். இதில், 15வது வார்டில் தந்தை ரமேஷ், 1வது வார்டில் மகன் பால கௌதம், 2வது வார்டில் மகள் மதுமிதா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

click me!