அடப்பாவிகளா.. கோவிலில் பெண்கள் குளியலறையில் 3 ரகசிய கேமரா.. பக்தர்கள் அதிர்ச்சி.. எங்கு தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jan 22, 2022, 9:22 AM IST

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி என்ற கிராமம் உள்ளது.  இந்த கிராமத்தில் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலில் பவுர்ணமி பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 


விளாத்திகுளம் அருகே காமாட்சி அம்மன் திருக்கோவிலில் உள்ள பெண்களின் குளியலறையில் 3 ரகசிய கேமிராக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி என்ற கிராமம் உள்ளது.  இந்த கிராமத்தில் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த  அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலில் பவுர்ணமி பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மாதம் தோறும் நடைபெறும் பவுர்ணமி பூஜைக்கு நெல்லை, விருதுநகர் மாவட்டங்களிலிருந்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் பிற ஊர்களிலிருந்தும் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

Tap to resize

Latest Videos

அவர்கள் தங்குவதற்காக கோயிலில் குளியலறை மற்றும் கழிவறைகளுடன் கூடிய அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 17ம் தேதி ஜனவரி மாத பவுர்ணமி பூஜை நடந்தது. அன்று தைப்பூசத் திருவிழா என்பதால் ஏராளமானோர் பூஜைக்கு வந்திருந்தனர். அப்போது குளியலறையில் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்த போது, சுவரின் மேல்புறம் பார்த்த போது கருப்புநிற வயர் ஒன்று தெரிந்துள்ளது. இதையடுத்து அதைத் தொட்டு பார்க்கையில் அந்த குளியலறையில் 3 கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். 

இது தொடர்பாக விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குளியறையில் இருந்த சிசிடிவி கேமராக்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கோவிலில் சிசிடிவி கேமிரா பொருத்திய டெக்னீசியனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் யார் கூறி இந்த கேமிராவை வைத்தார்? கோவில் நிர்வாகிகளில் யாரேனும் இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் குளியல் அறையில் கேமிரா வைத்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!