இவர் கடந்த 6 ஆண்டுகளாக நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாகவே ஆசிரியர் முத்தையா 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவரிடம் அடிக்கடி தேவையில்லாமல் பேசி வந்துள்ளார்.
திசையன்விளை தனியார் பள்ளியில் வகுப்பறையில் மாணவியிடம் ‘ஐ லவ் யூ’ கூறிய ஆசிரியருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளியில் சில்மிஷம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா (43). இவர் கடந்த 6 ஆண்டுகளாக நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாகவே ஆசிரியர் முத்தையா 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவரிடம் அடிக்கடி தேவையில்லாமல் பேசி வந்துள்ளார்.
இதையும் படிங்க;- இந்த வயசுலேயும் இப்படி ஒரு விரீயமா? 28 வயது இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய 80 வயது கிழவன்..!
கண்ணடித்து ‘ஐ லவ் யூ’
இந்நிலையில், சம்பவத்தன்று வகுப்பு நடைபெற்று கொண்டிருக்கும்போது மாணவிக்கு கணக்கு சொல்லி கொடுப்பதுபோல் பெஞ்சு அருகில் அமர்வது, கையை பிடிப்பதுமாக இருந்துள்ளார். இதனையடுத்து, கண்ணடித்து ‘ஐ லவ் யூ’ என்று கூறியுள்ளார்.
கணித ஆசிரியர் கைது
இதனால் அதிர்ச்சியடைந்த 9-ம் வகுப்பு மாணவி பள்ளி முடிந்ததும் தனது பெற்றோரிடம் சென்று விபரத்தை கூறி கதறி அழுதுள்ளார். இனி அந்த பள்ளிக்கு போக மாட்டேன் என்றும் போக சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நள்ளிரவில் ஆசிரியர் முத்தையா வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கினர். இதில், அவர் படுகாயமடைந்தார். உடனடியாக பொதுமக்கள் சிலர் சமரசம் செய்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இதுகுறித்து திசையன்வினை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் முத்தையாவை கைது செய்துள்ளனர்.