
இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். நன்மை தீமைகளை பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினரான ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பினர் நேற்று கொண்டாடினர்.
மேலும் ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை கொண்டாடும் விதமாக இன்று சுன்னத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக சிறப்பு தொழுகை நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
சென்னையில் கடந்த 1795ஆம் ஆண்டு, திருவல்லிக்கேணியில் ஆர்காட் நவாப் முகமது அலி வாலாஜா கட்டிய இந்த மசூதியில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, தொழுகைக்கு வருவோர் ரமலான் மாதத்தின் போது நோன்பு திறப்பதற்கு உணவு வழங்குவதற்காக அனுமதி கேட்டுள்ளார் தாதா ரத்தன்சந்த். அப்போது இருந்து, மசூதி நிர்வாகமும், அறக்கட்டளையினரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகின்றனர். ரமலான் மாதம் வந்துவிட்டாலே இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என்ற மதம் கடந்து பல்வேறு மத நல்லிணக்க நிகழ்வுகள் நடப்பது வழக்கம். தொடர்ந்து இதேபோல மத நல்லிணக்கம் தொடர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம் கூட.
இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !