அட்சய திருதியை.. தங்கம் வாங்க எந்த நேரம் உகந்த நேரம் தெரியுமா..!

By vinoth kumarFirst Published May 3, 2022, 8:13 AM IST
Highlights

அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். மேலும், இந்த நாள் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அட்சதிருதியை என்பது கொண்டாடப்படவில்லை. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டதை  நகை வாங்குவதில் மக்கள் ஆர்வம் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அட்சய திருதியை

அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். மேலும், இந்த நாள் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அட்சய திருதியையில் ‘குண்டுமணி நகையாவது வாங்க வேண்டும்’ என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது.

அட்சய திருதியை முகூர்த்த நேரம்

இதன்படி இந்தாண்டு அட்சய திருதியை இன்று அதிகாலை 5.18 மணிக்கு தொடங்கி, நாளை காலை 7.32 மணி வரை இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 45,000 சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள், சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் 7ம் தேதி நள்ளிரவு வரை திறக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடிய, விடிய அட்சதிருதியை நடப்பதால் மாநிலம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

உகந்த நேரம்

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அட்சதிருதியை என்பது கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு வந்துள்ளனர்.  இதையொட்டி கடந்த காலங்களை போல விற்பனை அதிகரிக்கும் என்று தங்க நகை வியாபாரிகள் கருதுகின்றனர். அட்சய திருதியையான இன்று நகை வாங்க உகந்த நேரம் காலை 8 மணி முதல் 9 மணி வரை, பகல் 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கம் வாங்க அதிகளவில் கடைகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!