பிப்.1 முதல் செல்போன் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு... அறிவித்தது தமிழக மின்வாரியம்!!

Published : Jan 28, 2022, 03:24 PM IST
பிப்.1 முதல் செல்போன் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு... அறிவித்தது தமிழக மின்வாரியம்!!

சுருக்கம்

தமிழ்நாட்டில் சோதனை முறையாக பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மொபைல் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்து உள்ளது. 

தமிழ்நாட்டில் சோதனை முறையாக பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மொபைல் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்து உள்ளது. நுகர்வோரே மின்சாரக் கட்டணத்தை கணக்கிடும் வகையில், புதிய கைப்பேசி செயலியை (Mobile App) தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டு, மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒருசில நிமிடங்களில், மின் கட்டண ரசீது குறுஞ்செய்தி வாயிலாக நுகர்வோருக்கு அனுப்பப்படும். மின் வாரியத்தின் பல்வேறு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து வரும் நிலையில், தற்போது சோதனை முறையில் செயலின் மூலம் செல்போன் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கிடும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.

முதல் கட்டமாக வரும் 1 ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில், மின்வாரிய ஊழியர்களுக்கு இந்த செயலி வழங்கப்பட்டு, சோதனை செய்யப்பட உள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கைபேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கிடும் முறை சோதனை அடிப்படையில் அமல் படுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ள நிலையில், முதல்கட்டமாக சென்னை, வேலூர் மண்டலங்களில் மட்டுமே சோதனை முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த செயலியின் சாதக, பாதகங்களை, நுகர்வோர் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தலைமையகத்துக்கு விவரங்களை அனுப்ப ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை, வேலூர் மண்டலங்களில் மட்டுமே சோதனை முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் கைபேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மின்சார வாரிய ஊழியர்கள் மின் கணக்கீடு பணியை செய்து வந்த நிலையில் தற்போது உட்கார்ந்த இடத்தில் இருந்தே செல்போன் செயலி மூலம் மின் கணக்கீடு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!