விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்... மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!!

By Narendran SFirst Published Dec 21, 2022, 11:45 PM IST
Highlights

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசின் உருமாறிய வகையான பிஎப் 7 ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் 3 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. 

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசின் உருமாறிய வகையான பிஎப் 7 ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் 3 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எந்த சூழலையும் சமாளிக்க தயார்... கொரோனா குறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா டிவீட்!!

மேலும் சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசின் உருமாறிய வகையான பிஎப் 7 ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் 3 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் 2 பேருக்கும் ஒடிசாவில் ஒருவருக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் வெளிநாடுகளில் இருந்து இந்திய வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து சீனாவுடனான விமான போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில், சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, மத்திய சுகாதார இயக்குனரகத்திற்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் ஒமிக்ரான் திரிபு... 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்!!

அதில், தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. தொற்று எண்ணிக்கை 49 என்ற நிலையிலும் உயிரிழப்பு இல்லாத நிலை உள்ளது என கூறி உள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 97 சதவீதம், 2ம் தவணை தடுப்பூசி 92 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும். விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

click me!