புதுசா வீடு கட்டுபவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..! தமிழக அரசு அதிரடி...!

By thenmozhi gFirst Published Nov 7, 2018, 4:53 PM IST
Highlights

வீடு அல்லது அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கு, தள பரப்பளவு குறியீடு எனப்படும் கட்டிட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்பட்டும் விதி அமலில் உள்ளது.
 

இனி சென்னையில் தாரளமாக வீடு கட்டிக்கலாம்..! தமிழக அரசு அதிரடி...! 

வீடு அல்லது அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கு, தள பரப்பளவு குறியீடு எனப்படும் கட்டிட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்பட்டும் விதி அமலில் உள்ளது.

அதன்படி, 4 மாடிகளுக்கு மிகாத கட்டிடங்களுக்கு, எப்.எஸ்.ஐ. அளவு 1 புள்ளி 5 மடங்காக இருந்தது. ஆனால்  தற்போது அதனை 2 மடங்காக அதிகரித்து அரசாணை பிறபிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம், ஆயிரம் சதுர அடி நிலத்தில், 2 ஆயிரம் சதுர அடி அளவிலான பரப்பு வரை கட்டிடத்தை கட்டிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, 1000 சதுர அடி நிலத்தில் 1,500 சதுர அடி அளவில் மட்டுமே  கட்டிடத்தை கட்ட வேண்டும் என்ற  விதி இருந்தது. இந்த நிலையில், சென்னை நந்தனத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தள பரப்பளவு குறியீடு அளவை 2 மடங்காக அதிகரித்து அரசாணை வெளியிட்டார்.

இதன் மூலம், புதியதாக வீடு கட்ட திட்டம் போட்டுள்ளவர்கள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, குறைந்த  இடத்திலேயே தாரளமாக வீடு கட்டிக்கொள்ளலாம். 

click me!