வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

By Raghupati R  |  First Published Oct 10, 2022, 5:15 PM IST

தீபாவளி வருவதை முன்னிட்டு,  தமிழகத்தில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.


வரும் அக்டோபர் 24 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி புத்தாடை உடுத்தி பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை பகிர்ந்து கொண்டாடுவார்கள்.

பட்டாசுகள் வெடிக்க கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுசூழல் மாசு ஏற்படுவதால் அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது.  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..‘மயிலாப்பூரில் சுண்டைக்காய் விலை கேட்டா தீர்வு வராது’ - நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த ப.சிதம்பரம்

இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018 ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

இதையும் படிங்க..“அதிமுக பிளவு எப்படியும் பாஜகவுக்கு ப்ளஸ் தான்..” அதிமுக கதி அவ்ளோதான் ? பகீர் கிளப்பிய குருமூர்த்தி !

மேலும், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

மாண்புமிகு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..திருமணம் ஆனவருடன் பாலியல் உறவு கொண்ட பெண்.. நீதி கேட்ட பெண்ணுக்கு கோர்ட் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு !

click me!