தனுஷை ஒன்றும் செய்துவிடாதீர்கள்; ஏமாற்றிய காதலனுக்காக வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை

By Dinesh TG  |  First Published Oct 10, 2022, 4:43 PM IST

சென்னை மாதவரம் அடுத்த மாத்தூரில் ஐந்து வருடங்களாக காதலித்து வந்த காதலன் ஏமாற்றியதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை. தற்கொலைக்கு முன்பு தனது காதலனை ஒன்றும் செய்ய வேண்டாம் என உருக்கமாக வீடியோ வெளியிட்டு தற்கொலை.
 


சென்னை மாதவரம் அடுத்த சின்ன மாத்தூர் பாரதி நகர் தெருவைச் சேர்ந்தவர் ஏஞ்சல் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ். இவர்கள் இருவரும் அதே பகுதியில் எதிரெதிரே வீட்டில் வசித்து வந்ததால்  இருவருக்கிடையே காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக இருவரும்  காதலித்து வந்துள்ளனர். 

இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏஞ்சல் செல்போன் வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தனுஷ் வேறொரு பெண்ணோடு பழகி வருவதாகவும் அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது..

Tap to resize

Latest Videos

இதுகுறித்து ஏஞ்சல் தனது காதலன் தனுஷிடம் விளக்கம் கேட்க அதற்கு அவரும் அந்த தகவல் உண்மை தான். நான் அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். என்னை மறந்துவிடு என்று தெரிவித்துள்ளார். 

அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பியதால் நிலத்தை இழந்த விவசாயி கதறல்

இதனால் இரு தினங்களாக  மன உளைச்சலில் இருந்த ஏஞ்சல் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை இதுகுறித்து தனுஷ் வீட்டிற்கு சென்ற ஏஞ்சல் தான் ஏமாற்றப்பட்டதை அவருடைய பெற்றோரிடம் தெரிவித்து நியாயம் கேட்டுள்ளார். 

அதற்கு அவர்களும் அவன் விருப்பம் எதுவோ அதுவே நடக்கும், இதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஏஞ்சல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுடைய சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வெளியே சென்றிருந்த ஏஞ்சலின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய காவலர்கள் பெண்ணின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஏஞ்சலின் செல்போனை ஆய்வு செய்தனர்.

சாயம் போகாத கட்சி திமுக - அமைச்சர் கே.என்.நேரு

அப்போது ஏஞ்சலின் தன்னுடைய செல்போனில் அவர் இறப்பதற்கு முன்பாக பேசிய வீடியோ ஒன்றில் தன்னுடைய தற்கொலைக்கு நானே காரணம். காதல் தோல்வியால் தனது காதலனை மறக்க முடியவில்லை. அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இதற்காக தனது காதலனை ஒன்றும் செய்ய வேண்டாம் எனவும் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் தோல்வியால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!