குட்நியூஸ்.. இனி சென்னை புறநகர் ரயில்களிலும் குளுகுளுனு பயணிக்கலாம்.. விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம்..!

By vinoth kumar  |  First Published Oct 10, 2022, 2:55 PM IST

சென்னை கடற்கரை -  தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கம் முக்கிய ரயில் போக்குவரத்து தடமாக உள்ளது. இந்த வழிதடத்தில் தினமும் 250க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 


அதிவிரைவு ரயில்களை போல சென்னை புறநகர் மின்சார ரயில்களிலும் விரைவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டிகள் பயன்பாட்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கடற்கரை -  தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கம் முக்கிய ரயில் போக்குவரத்து தடமாக உள்ளது. இந்த வழிதடத்தில் தினமும் 250க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அந்த ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளும் உள்ளன. இதனுடன் ஏசி பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பிளாட்பாரத்தில் பொறிபறந்த பட்டாக்கத்தி.. ரயில் பயணிகளை மிரளவைத்த மாணவர்கள்.. என்ன செய்ய போகிறது காவல்துறை?

இந்த கோரிக்கை அடிப்படையில் ஏசி ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விரைவில் சென்னையில்  குளிர்சாதனப் பெட்டிகள் கூடிய புறநகர் மின்சார ரயில்கள் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த வசதி பயன்பாட்டிற்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க;-  பஸ் ஸ்டாப்பில் வைத்து பள்ளி சீருடையில் 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்.. வைரல் வீடியோ..!

click me!