விமானப்படை தினத்தை முன்னிட்டு தாம்பரம் விமானப்படை தளத்தில் வீரர்கள் சாகசம்

By Dinesh TG  |  First Published Oct 8, 2022, 6:48 PM IST

நாட்டின் 90வது விமானப்படை தினத்தை முன்னிட்டு தாம்பரம் விமானப்படை தளத்தில் படை வீரர்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டதை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
 


90 வது  விமானப்படை  தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து விமானப்படை தளங்களிலும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானப்படை தினத்தை முன்னிட்டு தாம்பரம் விமானப்படை தலைவர் ஏர்  கமாண்டர் விபூல் சிங் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், காவல்துறை துணை ஆணையர்கள் ஜோஸ் தங்கையா, சிபி சக்கரவர்த்தி மற்றும் விமானப்படை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திருக்குறள் பற்றி ஆளுநருக்கு ஆழ்ந்த ஞானம் கிடையாது - வைகோ குற்றச்சாட்டு

Tap to resize

Latest Videos

நிகழ்ச்சியில் விமானப்படையில் பயன்படுத்தப்படும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவற்றை கண்டு ரசித்தனர். விமானப் படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 

கோவையில் கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டரில் வானில் பறந்து விமானப்படையினர் பல்வேறு சாகச செயல்களை  நடத்தி காட்டினார் இதனை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்    

click me!