ஐஐடியை எட்டிய அரசுப் பள்ளி மாணவர்… கல்விச்செலவை ஏற்றுக்கொண்டது தமிழக அரசு!!

By Narendran SFirst Published Oct 28, 2021, 12:24 PM IST
Highlights

ஐஐடி நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர் அருண்குமாரின் கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஐஐடி என்பது உலகத் தரம் வாய்ந்த கல்விக் கூடம். இங்கே படித்த மாணவர்களில் பலர், உலகின் பல பெரிய நிறுவனங்களின் பெரிய பதவிகளில் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கே படித்த மாணவர்களில் 90% மாணவர்கள், வெளிநாட்டிற்கு மேல்படிப்பிற்க்காகவும், பெரிய நிறுவனங்களில் பணிபுரியவும் செல்கின்றனர். இத்தகைய பெருமையுடைய கல்விக்கூடத்தில் பயில போட்டி இருப்பதில் வியப்பு இல்லை.  ஐஐடி, JEE எனப்படும் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களை சேர்க்கின்றது.  சுமார் 2000 இடங்களுக்கு, ஆண்டுதோறும் 1,50,000 மேற்பட்ட மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதுகிறார்கள். நுழைவுத்தேர்வுக்கான, ஆயத்த பணிகளை 90% மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பிலேயே ஆரம்பித்து விடுகின்றனர்.  உலகின் கடினாம தேர்வுகளில் இந்த ஐஐடி தேர்வும் ஒன்று. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த அருண்குமார் என்ற மாணவர் பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.  திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னழகன்  - பூவாத்தாள் தம்பதியரின் மகன் அருண்குமார்.  இவர் செவல்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார். இவர் இந்த ஆண்டு இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதை அடுத்து அவருக்கு அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  இதற்கிடையே மாணவர் அருண்குமாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார்.

மேலும் எளிய பின்புலத்திலிருந்து வந்து, அரசுப் பள்ளியில் படித்து இந்த சாதனையை நிகழ்த்திய மாணவரைப் பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருண்குமாரின் மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என உறுதியளித்தார். இந்த அறிவிப்பு அருண்குமார் மற்றும் அவரது பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.மேலும் இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னழகன்  - பூவாத்தாள் தம்பதியரின் மகன் அருண்குமார்.  செவல்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவர், இந்த ஆண்டு இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர் அருண்குமாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார். எளிய பின்புலத்திலிருந்து வந்து, அரசுப் பள்ளியில் படித்து இந்த சாதனையை நிகழ்த்திய மாணவரைப் பாராட்டிய முதலமைச்சர், அருண்குமாரின் மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என  உறுதியளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அருண்குமாரின் விட முயற்சியும் கல்வி மேல் அவர் கொண்டிருந்த ஆர்வமும் அவர்ருக்கு இத்தகைய வெற்றியை பெற்று தந்துள்ளதோடு அவரது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளது.  

click me!