தயிர் பாக்கெட்டில் தஹி என அச்சிட இயலாது... மத்திய அரசின் முடிவை ஏற்க தமிழக அரசு மறுப்பு!!

By Narendran SFirst Published Mar 29, 2023, 5:43 PM IST
Highlights

ஆவின் நிறுவன தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட இயலாது என்று மத்திய அரசின் முடிவை ஏற்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 

ஆவின் நிறுவன தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட இயலாது என்று மத்திய அரசின் முடிவை ஏற்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக ஆவின் நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டுகளின் மீது தஹி என்று ஹிந்தியில் எழுத வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அரசு வலியுறுத்தியிருந்தது. இதற்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதையும் படிங்க: பாஜக கல்வியாளர் பிரிவு மாநில செயற்குழு கூட்டம்... நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன தெரியுமா?

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுக்குறித்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் கூறுகையில், கடந்த ஜன.11ம் தேதி ஆவின் நிறுவன தயிர் பாக்கெட்டுகளின் மீது தயிர் என்று எழுதக்கூடாது, தஹி என்று ஹிந்தியில் எழுத வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் என கடிதம் எழுதி இருந்தது.

இதையும் படிங்க: ராகுல் தகுதி நீக்கம் விவகாரம்... ஒரு மாத தொடர் போராட்டத்தை அறிவித்தது தமிழக காங்.!!

இதை ஆகஸ்ட் மாதத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரானது. இந்தியைச் சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதனால் இந்தியில் தஹி என்று அச்சிட மாட்டோம் என்று தெரிவித்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

click me!