கீழடியில் 9வது கட்ட அகழாய்வு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கும்: தொல்லியல் துறை அறிவிப்பு

Published : Mar 29, 2023, 05:20 PM ISTUpdated : Mar 29, 2023, 06:05 PM IST
கீழடியில் 9வது கட்ட அகழாய்வு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கும்: தொல்லியல் துறை அறிவிப்பு

சுருக்கம்

கீழடியில் 9வது கட்ட அகழாய்வு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பம் ஆகும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இதுவரை 8 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருட்கள் கிடைத்துள்ள நிலையில், அடுத்தகட்ட அகழ்வாராய்ச்சி விரைவில் தொடங்குகிறது. தொல்லியல் துறை ஆணையர் (பொ) சிவானந்தம், இணை இயக்குநர் (கீழடி பிரிவு) ரமேஷ் குழுவினர் இந்த அகழாய்வை மேற்கொள்வார்கள்.

இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் அறிக்கை கடந்த ஜனவரி மாதம் தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்ட தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இந்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார்.

புகழ்பெற்ற ஓவியர், சிற்பக் கலைஞர் விவான் சுந்தரம் காலமானார்

சென்ற 5ஆம் தேதி கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்களுக்காக பிரத்யேகமாகக் கட்டப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

அதன்படி 2 ஏக்கர் பரப்பளவில் 18 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் செட்டிநாடு கட்டடக்கலை பாணியில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.  மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலை மார்க்கத்தில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பண்பாட்டின் தடங்களை அனைவரும் பார்வையிடலாம். 4429 மணிகள், 601 வட்டச் சில்லுகள், 80 ஆட்டக் காய்கள், 16 சுடுமண் உருவங்கள், 14 நாணயங்கள், தங்க அணிகலன்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!