திருவள்ளூரில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த, சரளா என்ற மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். அவர் பள்ளியின் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். இன்று காலை வழக்கம்போல் தோழிகளுடன் உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உள்ள அறைக்கு சென்றார்.
நீண்ட நேரம் ஆனதால் விடுதி அறைக்கு சென்று பார்த்த தோழிகள், தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி சர்ச்சை.. பள்ளிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு !
திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவி வழக்கில் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுர சுந்தரி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய டிஐஜி சத்யபிரியா, ‘முதற்கட்ட விசாரணையின்படி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.
அதன்படியே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். சிபிசிஐடி இனி இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிவிடுவர். சம்பந்தப்பட்டவர்களிடம் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. இன்றேகூட மாணவியின் உடற்கூறாய்வு செய்யப்படும். மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோர் அனைவரும் இங்குதான் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..மனைவியின் பிறப்புறுப்பில் பீர் பாட்டில்.. நண்பருடன் சேர்ந்து கணவன் செய்த கொடூர வெறிச்செயல்
அவர்களிடம் அனைத்தையும் எடுத்து கூறியுள்ளோம். இதில் வேறு எந்தக் குழப்பமும் கிடையாது. காவல் துறையின் வேண்டுகோள் என்னவென்றால், தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். ஒரு சிலர் வேறு வேறு விதமாக இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்து வருகின்றனர். தேவையற்ற இடங்களில், மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்’ என்று கூறினார்.
தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சகோதரி காயத்ரி இதுகுறித்து பேசிய போது, ‘இன்னும் வெளிவராத தகவல் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். அவளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அவள் உடலை எடுக்க மாட்டோம். அவள் தற்கொலை செய்து கொள்ளக் கூடியவர் அல்ல. நேற்று இரவும் எங்கள் குடும்பத்தினரிடம் நன்றாக பேசினார்’ என்று கூறியுள்ளார். மாணவி ஸ்ரீமதி இறந்த சோகம் நீங்காத இந்த சூழலில், மற்றொரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..இனி இவர்தான் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்..! ஓபிஎஸ் வலையில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி