தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை.. வானிலை மையம் வெளியிட்ட கூல் அப்டேட்..

Published : May 24, 2023, 05:08 PM ISTUpdated : May 24, 2023, 05:10 PM IST
தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை.. வானிலை மையம் வெளியிட்ட கூல் அப்டேட்..

சுருக்கம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வருகிறது. அதுவும் அக்னி நட்சத்திரம் என்பதால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க : கொளுத்தும் வெப்பத்தில் இருந்து விடுதலை.. 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

வரும் 27, 28 ஆகிய தேதிகளில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ 5,000 மற்றும் ரூ 10,000 நோட்டுகள்! எப்போது பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது?

PREV
click me!

Recommended Stories

இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக ஆயத்தம்: மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி கூட்டம்
மக்களின் தீர்ப்பை ஏற்கத் தயங்குவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் !