ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருத்தர்..! விரைவில்... தொட்டில் குழந்தை திட்டம்..!

By ezhil mozhiFirst Published Jun 25, 2019, 4:34 PM IST
Highlights

பெண் சிசு கொலையை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் தொட்டில் குழந்தை திட்டத்தை விரிவுபடுத்த சமூக நலத்துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் சிசு கொலையை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் தொட்டில் குழந்தை திட்டத்தை விரிவுபடுத்த சமூக நலத்துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் தற்போது தர்மபுரி, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், கடலூர், மதுரை, திருவண்ணாமலை, அரியலூர், விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெற்றோர்களால் நிராகரிக்கப்படும் குழந்தைகள், சுகாதார நிலையங்கள், குழந்தைகள் காப்பகங்கள் என இவற்றில் இருந்து குழந்தைகளை எடுத்து தத்து கொடுக்கின்றனர்.

இந்த திட்டத்தின் மூலம் இதுவரையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெறப்பட்டுள்ளது. தற்போது 10 மாவட்டங்களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் உள்ளன. ஒரு மையத்தில் நான்கு பணியாளர்கள் அமர்த்தப்படுகின்றனர். யாருமே நேரடியாக வந்து இந்த மையங்களில் குழந்தைகளை கொடுப்பது கிடையாது.

மருத்துவமனையில் இருந்தோ, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்தோ, பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள் அங்கிருந்துதான் பெறப்படுகின்றன. எனவே இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டு, ஏற்கனவே ஒரு மையத்தில் நான்கு பேர் வீதம் பணி புரிந்து வருகின்றனர். 4 பேர் ஒரு மையத்திற்கு தேவை இல்லை என்பதால், அனைத்து மாவட்டத்திலும் தொட்டில் குழந்தை திட்டத்தை ஏற்படுத்தி ஒரு மையத்திற்கு ஒருவர் வீதம் பணியமர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. 

click me!