தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இந்த நிலைக்கு செல்லவில்லை... உண்மையை உடைத்த மா.சுப்ரமணியன்!!

By Narendran SFirst Published Jan 16, 2022, 8:33 PM IST
Highlights

ஜனவரி 22 ஆம் தேதி தமிழகத்தில் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். 

ஜனவரி 22 ஆம் தேதி தமிழகத்தில் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் தாமோ அன்பரசன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து,ஜனவரி 22 ஆம் தேதி தமிழகத்தில் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 1,91,902 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதில் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு படுக்கைகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் 8,912 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் லேசான கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெறுகின்றனர். ஒமைக்ரான் தொற்றில் இருந்து முழுமையாக பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. ஏனெனில், 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இறப்பு நிலைக்கு செல்லவில்லை. ஜனவரி 22 ஆம் தேதி தமிழகத்தில் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. எனவே,தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவோர்கள், இந்த முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கொண்டாட்டங்களை தாண்டி உயிர் முக்கியம் எனவே கடற்கரைக்கு செல்வதை தவிர்த்து மக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

click me!