தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

By vinoth kumarFirst Published Aug 14, 2018, 12:11 PM IST
Highlights

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றிய 15 வழக்குகளில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் ரத்து செய்து ஆணை பிறப்பித்துள்ளது.

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் 100-வது நாளான மே 22-ம் தேதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 15 வழக்குகள் மற்றும் பொதுநலன் வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டன.

இந்த தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சி.டி. செல்வம், பஷீர் அகமது விசாரணைக்கு வந்தது. அப்போது துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐ மாற்றி அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். மேலும் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் ரத்து செய்து ஆணை பிறப்பித்தனர். தமிழக அரசு முறையாக பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இது தொடர்பாக, சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி 4 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதற்கு அரசியல் தலைவர் வரவேற்பு அளித்துள்ளனர்.

click me!