அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெள்ளி வேல், செங்கோல்கள் திருடுபோய்விட்டதாக கூறிய நிலையில், அந்த தகவலை தற்போது அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.
அதிமுக அலுவலகத்திற்கு சீல்
அதிமுகவில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என முழக்கம் ஏற்பட்ட நாள் முதல் தொடர்ந்து ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. இதனையடுத்து ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களோடு சென்று கைப்பற்றினார். அப்போது ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. 40க்கும் மேற்பட்டவர்கள் காயம்பட்டனர். இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளே சென்றனர். இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை பரபரப்பான நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
அதிமுக அலுவலகத்தின் கதவுகள் உடைப்பு
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்ட நீதிபதி,எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் விரும்பதகாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஒரு மாத காலத்திற்கு தொண்டர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்ககூடாது எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீலை அரசு அதிகாரிகள் அகற்றினர். அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் உடன் இருந்தனர். 10 நாட்களுக்கு பிறகு அதிமுக அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில், வழக்கத்திற்கு மாறாக அதிமுக தலைமை அலுவலகம் அலங்கோலமாக காட்சி அளித்தது. அதிமுக அலுவலகத்திற்குள் சேதமடைந்த இடத்தை முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் பார்வையிட்டார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தை படம் பிடிக்க பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த அனைத்து கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அவைத்தலைவரின் அறை கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தது.
கைக்கு வந்த கட்சி அலுவலகம்.. கேப் விடாமல் அடித்து நொறுக்கும் இபிஎஸ்.. தொடரும் ஓபிஎஸின் சறுக்கல்.!
காணமல் போன ஆவணங்கள்
மேலும் அதிமுக அலுவலகத்தில் அறிக்கைகள் தயாராகும் அறையில் இருந்து அனைத்து பொருட்களும் தூக்கி வீசப்பட்டு கிடந்தது. குறிப்பாக அலுவலகத்தில் இருந்த கணிணிகள் உடைக்கப்பட்டும் உள்ளே இருந்த ஹார்டுடிஸ்க்கும் காணமல் போயிருந்தது. மேலும் அதிமுக தலைமை கழக மேலாளர் மகாலிங்கத்தின் அறை முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டிருந்தது.அந்த அறையில் இருந்த மேஜை, டிவி, கணிணி, ஏசி ஆகியவை உடைக்கப்பட்டிருந்தது. இந்த காட்சிகளை பார்த்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிர்ச்சி அடைந்தார். அப்போது ஜெயலலிதாவிற்கு பரிசு பொருட்களாக வந்திருந்த வெள்ளி வேல், செங்கோல்கள் திருடுபோய்விட்டதாக அதிமுக அலுவலக நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜெயலலிதாவின் பரிசு பொருட்கள் திருடு போகவில்லையென்றும் மற்றொரு அறையில் இருப்பதாக அலுலவக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திமுகவிற்கு செக் வைக்கும் அண்ணாமலை...! ஊழல் பட்டியலோடு தமிழக ஆளுநரோடு திடீர் சந்திப்பு
ஜெயலலிதாவி பரிசு பொருள் திருட்டா..?
ஆனால் அதிமுக அலுவலகத்தில் இருந்த பெரும்பாலான பொருட்கள் சேதம் அடைந்தும் ஆவணங்கள் கிழித்தும் எரியப்பட்டிருந்தது. அதிமுக அலுவலக பணிக்காக வைத்திருந்த வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் நாஞ்சில் சம்பத்திற்கு ஜெயலலிதா பரிசாக வழங்கிய காரின் கண்ணாடியும் உடைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சேதமடைந்த பொருட்களின் விவரங்களை அதிமுக அலுவலக ஊழியர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்