ப்ரீ பையர் கேம் ஆல் மோதல்.. தேவாலயம், கடை, வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்.. 4 பேருக்கு அரிவாள் வெட்டு.!

By vinoth kumar  |  First Published Jul 21, 2022, 2:06 PM IST

திருவண்ணாமலை அருகே சிறுவர்களின் பிரீ பையர் கேம் விளையாட்டால் இருதரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இததில், 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


திருவண்ணாமலை அருகே சிறுவர்களின் பிரீ பையர் கேம் விளையாட்டால் இருதரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூரை அடுத்த பெரிய கல்லப்பாடி ஊராட்சி பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் தேவாலயம் ஒன்றும் உள்ளது. அங்கு சிறுவர்கள்  ப்ரீ பையர் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாநகர் காலனி பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் போதையில் மாதா கோவில் அருகே வந்து அமர்ந்துள்ளனர். அப்போது, கூச்சலிட்டப்படியே சிறுவர்கள் விளையாடியதால் ஆத்திரமடைந்து அவர்களை தாக்கியுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த தந்தை.. நேரில் பார்த்த மகன்.. வெறியில் என்ன செய்தார் தெரியுமா?

இந்நிலையில், இன்று தேவாலயம் முன்பு கூடிய அப்பகுதி மக்கள் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த நபர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனையறிந்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆத்திரமடைந்து 20-க்கும் மேற்பட்ட நபர்கள் அடியாட்களுடன் வந்து கற்களைக் கொண்டு தாக்கியதுடன் மட்டுமின்றி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி மாதா கோவிலை உடைத்து உள்ளே கற்கள் மற்றும் சோடா பாட்டில்களை வீசி தாக்கியுள்ளனர். மேலும், அப்பகுதியில் இருந்த வீடு, கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டது.

இதையும் படிங்க;- நைட்டு வந்தாலே குடித்து விட்டு ஓயாமல் டார்ச்சர்.. வலி தாங்க முடியாமல் கணவனை போட்டு தள்ளிய மனைவி..!

இந்த தாக்குதலில் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த காந்தி, சங்கீதா பிரபா, சபரி முத்து உள்ளிட்ட 4 பேருக்கு  வெட்டு காயங்கள் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தப்பியோடிய அண்ணா நகர் காலனி பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!