பிரபல ஹோட்டல் சாப்பாட்டில் பேண்டேஜ்.. அலட்சியம் காட்டிய ஊழியர்கள்.. உரிமையாளர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jul 8, 2022, 8:58 AM IST

திருவண்ணாமலையில் பொன்ராயர் ஹோட்டலில் உணவில் காயங்களுக்கு ஒட்டும் பேண்டேஜ் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊழியர்களிடம் கேட்ட போது அவர்கள் கேள்வி கேட்டவரை அலட்சியாக பார்த்துவிட்டு மற்றவர்களுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


திருவண்ணாமலையில் பொன்ராயர் ஹோட்டலில் உணவில் காயங்களுக்கு ஒட்டும் பேண்டேஜ் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊழியர்களிடம் கேட்ட போது அவர்கள் கேள்வி கேட்டவரை அலட்சியாக பார்த்துவிட்டு மற்றவர்களுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சமீபகாலமாக கெட்டுப்போன கூல்ட் ரிங்ஸ் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிட்ட குழந்தைகள் இறந்த சம்பவம் தொடர் கதையாக இருந்து வருகிறது. சவர்மா, பிரியாணி, சாப்பாட்டில் கரப்பான் பூச்சி, பல்லி போன்ற உணவுகளாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவ்வப்போது அதிகாரிகள் சோதனை செய்தாலும் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- பிரபல ஒட்டல் கழிவறைக்கு சென்ற பெண்.. இளைஞர் செய்த காரியத்தால் அதிர்ச்சி.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

திருவண்ணாமலை கொசமட தெருவில் பொன்ராயர் ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் நேற்று மதியம் ஒருவர் உணவு சாப்பிட்ட வந்துள்ளார். அப்போது, அந்த காயங்களுக்கு ஒட்டப்படும் பேண்டேஜ் உணவில் இருந்துள்ளது. இதுதொடர்பாக ஹோட்டல் ஊழியரிடம் புகார் அளித்தும் அலட்சியாக பார்த்துவிட்டு மற்றவர்களுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் சமூகவலைதளங்களில் வீடியோவை பதிவிட்டுவிட்டு நியாயம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, உணவு பாதுகாப்புத்தறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். உணவுகளை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே முழுமையான தகவல்கள் தெரிவிக்க முடியும் என தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க;- அதிர்ச்சி!! மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி.. இரண்டு உயிர்களை காவு வாங்கிய பின்பும் தொடரும் அவலம்..

இதுதொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்தை கேட்ட போது தங்கள் ஹோட்டலில் பணிபுரியும் எந்த நபருக்கும் கைகளில் அடிப்படவில்லை. வீடியோ எடுத்த நபரே அந்த பேண்டேஜை எடுத்து வந்து போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என கூறியுள்ளனர். ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் அசைவ உணவை சாப்பிட்டு ஒரு குழந்தை, பள்ளி மாணவன் இரண்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;-  ஷாக்கிங் நியூஸ்.. ஓட்டலில் வாங்கிய சிக்கன் குழம்பில் பல்லி.. தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி..!

click me!