கணவனை பிரிந்து சென்று மறுமணம்.. காவல் நிலையத்தில் மணக்கோலத்தில் முன்னாள் மனைவி - கத்தியால் குத்திய கணவன் கைது!

By Ansgar R  |  First Published Jun 11, 2024, 6:36 PM IST

Bodinayakanur : தேனியில் காவல் நிலையத்திற்குள் இருந்த முன்னாள் மனைவியை, கத்தியால் சரமாரியாக குத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் தான் திவாகர். இவருக்கும் தாரணி என்பவருக்கும் திருமணமான நிலையில் அவர்கள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் அவர்களிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஏழு மாதங்களாக இந்த தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த சூழலில் தாரணியின் தந்தை, தனது மகள் காணவில்லை என்று திடீரென ஒரு நாள் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த விஷயமாக விசாரித்த போலீசார், ஒருநாள் தாரணியின் தந்தையையும் அவருடைய முன்னாள் கணவர் திவாகரையும் போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

உங்களின் ஆபாச வீடியோ எங்கள் கையில்; தருமபுரம் ஆதீனத்திற்கு ஆட்டம் காட்டிய உதவியாளர் கைது

அப்பொழுது அங்கு அஜித் என்பவரோடு மனக்கோளத்தில் தாரணி வந்திருக்கிறார், இதைக் கண்டு ஆத்திரமடைந்த முன்னாள் கணவர் திவாகர், தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது முன்னாள் மனைவி தாரணி, அவர் மறுமணம் செய்து கொண்ட அஜித் மற்றும் அவர்களோடு வந்திருந்த உறவினர் ஒருவரையும் கத்தியால் குத்தியுள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த மூவரும் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல் நிலையத்தில் வைத்து திவாகர் கைது செய்யப்பட்டார். தன்னோடு சேர்ந்து வாழாமல் திடீரென காணாமல் போன மனைவி மறுமணம் செய்து கொண்டு மனக்கோளத்தில் வந்து நின்ற காட்சியை பார்த்த திவாகர் காவல் நிலையத்தில் வைத்து மூவரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Crime: கோவில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் மோதல்; கொலையில் முடிந்த முன்விரோதம்

click me!