Suicide: ஆண்டு தேர்வில் குறைவான மதிப்பெண்; பெற்றோர் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவன் விபரீத முடிவு

By Velmurugan s  |  First Published Jun 11, 2024, 4:41 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி முழு ஆண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் பெற்றோர் கண்டித்த நிலையில், மனம் உடைந்த 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் காந்தி, சைலா தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் என மொத்தம் 3 பிள்ளைகள் இருந்துள்ளனர். கடைசி மகனான யுவராஜ் கே.பந்தரப்பள்ளி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 10ம் வகுப்புக்கு தேர்ச்ச பெற்றுள்ளார். தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் தான் கோடை விடுமுறை நிறைவு பெற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

பாஜகவில் இருப்பவர்கள் குற்ற பின்னணி உள்ளவர்களா? தமிழிசைக்கு திருச்சி சூர்யா நேரடி சவால்

Tap to resize

Latest Videos

அதன்படி கே.பந்தரப்பள்ளி அரசுப் பள்ளியும் நேற்றைய தினம் தான் திறக்கப்பட்டது. இதனிடையே 9ம் வகுப்பு வரையிலான முழுஆண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதில் யுவராஜ் 9ம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததாகவும், இதன் காரணமாக அவனது பெற்றோர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் மாணவனின் மதிப்பெண் குறித்து முறையிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த யுவராஜின் பெற்றோர் மதிப்பெண்களை குறிப்பிட்டு மாணவனை கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சிறுவன் வீட்டில் இருந்த விசத்தை எடுத்து குடித்துள்ளான். இதனை அறிந்த பெற்றோர் உடனடியாக மாணவனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

Breaking: புதுவையில் கழிவறை வழியாக பரவிய விஷ வாயு; ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் பலி - இருவர் கவலைக்கிடம்

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!