"எவ்வளவு நாள்தான் மற்றவர்களை சார்ந்து இருப்பது" திமுகவிற்கு எதிராக களம் இறங்க திட்டமிடும் செல்வப் பெருந்தகை

By Ajmal Khan  |  First Published Jun 11, 2024, 2:56 PM IST

ஆட்சி அமைக்க வேண்டும் காமராஜர் ஆட்சி என்றால் அதில் எனக்கும் உடன்பாடுதான், ஆனால் அதில் கொஞ்சம் தந்திரம் வேண்டும், அது எப்படி என்று யோசியுங்கள், நாற்காலி காலியானால் தான் ஒருவர் அமர முடியும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 


பாஜகவிற்கு எதிராக தீர்மானம்

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் சென்னை  காமராஜர் அரங்கத்தில், மாநில தலைவர் கு. செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி, ராகுல்காந்திக்கு பாராட்டு, நீட் தேர்வு முறைகேடுகளும், குளறுபடிகளுக்கு எதிராக தீர்மானம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசி காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை,  பல செய்திகள் இந்த தேர்தலில் நமக்கு கிடைத்து உள்ளது ,தமிழ் மண் உலகத்திற்கு வழி காட்டியாக உள்ளது.

Tap to resize

Latest Videos

Vikravandi Dmk Candidate : விக்கிரவாண்டி தொகுதிக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு.! யார் இந்த அன்னியூர் சிவா.?

யாரையாவது சார்ந்து இருப்பதா.?

ஆர்,எஸ்,எஸ் மற்றும் பாஜகவை வீழ்த்த தமிழகம் ஒரு உதவியாக இருக்கும்,பாசிசத்தை வீழ்த்துவது நம் அனைவரின் கடமை என  தெரிவித்தார்.  ராகுல் காந்தி, மலிகார்ஜூன கார்கே போன்ற தலைவர்கள் தமிழகத்திற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள்.  மத்தியில் ஆட்சி அமைத்த கட்சி இன்று மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறது, ஆனால் நம் தலைவர்கள் அதிகார பசியில் இல்லை,மக்களுக்கு நல்லது செய்ய இருக்கிறோம் என கூறினார்.  இந்தியாவில் முதன்மையான கட்சியாக காங்கிரஸ் மாற வேண்டும், நாம் தனியாக இருக்க வேண்டுமா? அல்லது யாரையாவது சார்ந்து இருக்க வேண்டுமா என்பதை குறித்து முடிவு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

காமராஜர் ஆட்சி

தோழமை என்பது வேறு ,எவ்வளவு நேரம் ஒருவரை சார்ந்து இருக்க வேண்டும் என்பது நீங்கள் தான் சொல்ல வேண்டும், காங்கிரஸ் கட்சியை எவ்வாறு பலப்படுத்த வேண்டும்,  ஆட்சி அமைக்க வேண்டும் காமராஜர் ஆட்சி என்றால் அதில் எனக்கும் உடன்பாடுதான், ஆனால் அதில் கொஞ்சம் தந்திரம் வேண்டும், அது எப்படி என்று யோசியுங்கள், நாற்காலி காலியானால் தான் ஒருவர் அமர முடியும். சோனியா காந்தி, ராகுல் காந்தி உயிரை பனையம் வைத்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேரு இருந்த பொது நாட்டில் நிலைமை எப்படி இருந்தது, நாட்டை தூக்கி நிறுத்தியவர் நேரு, ஆங்கில புலமையால் இந்தியாவை தூக்கி நிறுத்தினார் நேரு 

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் தேதி திடீர் மாற்றம்.!! புதிய தேதி என்ன.? தேதி மாற்றத்திற்கு காரணம் என்ன.?

வெற்றிக்கு காரணம் ஸ்டாலின் தான்

அந்த குடும்பம் நாட்டிற்கு எண்ணற்ற தியாகம் செய்திருக்கிறது, முதலில் எதிரியை காலி செய்ய வேண்டும், அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நின்ற அனைவரும் எம்பிக்கள் ஆகி உள்ளார்கள் என்றால் அதற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் முதலமைச்சர் தான் காரணம் என தெரிவித்த செல்வப்பெருந்தகை,  மோடி ஆட்சி செய்கின்ற ஒவ்வொரு நொடியும் நமக்கு ஆபத்து தான் என கூறினார். 

click me!