மாணவர்களுக்கு இனி Home Work இல்லை...! எந்த எந்த வகுப்புக்கு தெரியுமா..? பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு

By Ajmal KhanFirst Published Aug 16, 2022, 12:50 PM IST
Highlights


நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்க கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. 
 

பள்ளி மாணவர்களுக்கு வீட்டு பாடம்

பள்ளி மாணவர்களுக்கு அதிமகமான வீட்டு பாடங்கள் கொடுக்கப்படுவதாகவும், மேலும் புத்தகப்பையின் எடை மாணவர்களின் எடையை விட அதிகமாக இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில் 1 மற்றும் 2ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளியில் வீட்டுப்பாடம் அளிக்கக்கூடாது  மேலும் மொழிப்பாடம் கணிதம் தவிர்த்து மற்ற வேறு எந்த பாடங்களையும் பள்ளிகள் நடத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் பள்ளி மாணவர்களின் புத்தகப் பையை பொறுத்தவரை ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை  ஒன்றரை கிலோ எடையை தாண்ட கூடாது என்றும், 3 முதல் 5  வகுப்பு  வரை படிக்கும் மாணவரின் புத்தகப்பை  2 கிலோவில் இருந்து 3 கிலோ வரை மட்டுமே இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது, இதே போல மற்ற வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை தொடர்பாகவும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.  ஆனால் இந்த நடைமுறையை எந்த பள்ளிகளும் பின்பற்றாத நிலை தான் நீடித்து வந்தது.

பல மணி நேரமாக உயிருக்கு போராடும் யானை..! சிகிச்சை அளிப்பது யார்? குழப்பத்தில் தமிழக - கேரளா வனத்துறையினர்

சுதந்திர தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கவில்லையா..? கடைகள்,நிறுவனங்களுக்கு செக் வைத்த அரசு

1, 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம்

தற்போது பள்ளிகளில்  ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான வீட்டு படங்கள் கொடுக்கப்படுவதால் ஆரம்பத்திலேயே கல்வி மீதான பயம்  ஏற்படும் சூழல் உருவாகும் என சமூக ஆர்வலர்களால் புகார் கூறப்பட்டது. மேலும்  கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு பள்ளிகள் துவங்கப்பட்ட நிலையில்1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மாணவர்களுக்கு மனரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்பட்டது.இந்த கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம்  வீட்டுப்பாடம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள்து. மேலும் மாணவர்களுக்கு வீட்டு பாடம் தரவில்லை என்பதை  பறக்கும் படையினர் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

இதையும் படியுங்கள்

உங்களுக்கு ஒரு நியாயம்...! ஊருக்கு ஒரு நியாயமா..? ஸ்டாலின் அரசு மீது பொங்கி எழுந்த அண்ணாமலை

 

click me!