Nainar Nagendran : நயினார் நாகேந்திரனுக்கு செக்... இரண்டாவது முறையாக சம்மன்... அதிரடிகாட்டும் சென்னை போலீஸ்

By Ajmal Khan  |  First Published Apr 25, 2024, 9:19 AM IST

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த பணம் தொடர்பாக விசாரணை நடத்த பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் இரண்டாவது முறையாக போலீசார் சம்மன் அளித்துள்ளனர். 
 


கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற முடிந்துள்ளது. முன்னதாக தேர்தல் பிரச்சாரம் விறு விறுப்பாக நடைபெற்ற போது வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் பணி நடைபெற்றது. இதனை தடுத்து பறக்கும் படையினர் தீவிரமாக களம் இறங்கினர். அப்போது சென்னை தாம்பரம் ரயிலில் இருந்து நெல்லைக்கு கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்படுவதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறிப்பிட்ட ரயில் கோச்சில் அதிகாரிகள் சோதனை செய்த போது கட்டுக்கட்டாக பெட்டி நிறைய பணம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை கொண்டு சென்ற சதீஷ் (வயது 33) நவீன் (வயது 31) பெருமாள் (வயது 25) ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tap to resize

Latest Videos

Nainar Nagendran: 4 கோடி ரூபாய் யாருடையது.? போலீஸ் விசாரணையில் வெளியான நயினார் உறவினர் வாக்குமூலம்.. பாஜக ஷாக்

நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

அதில்  நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான  புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும் இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர் . இதனையடுத்து வருமான வரித்துறையினரிடம் பணம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கரூவூலத்தில் பணம் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 4 கோடி ரூபாய் பணம் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளிக்கப்பட்டது.விசாரணையில் இருந்து ஆஜராக 10 நாட்கள் காலஅவகாசம் நயினார் நாகேந்திரன் கேட்டிருந்தார்.

இரண்டாவது முறையாக இன்று சம்மன்

இதனையடுத்து நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் உள்ளிட்டவர்களிடம் நேற்று முன் தினம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து மீண்டும் நயினாருக்கு சம்மன் அளிக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர்.  நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு தாம்பரம் போலீசார் இரண்டாவது முறையாக சம்மன் அளிக்க திட்டமிட்டு நேற்று நெல்லை புறப்பட இருந்தனர் .  நயினார் நாகேந்திரன் சென்னை வந்து கொண்டிருப்பதாகவும் அதனால் சென்னையில் தனக்கு கொடுத்து விடுமாறும் கூறி தி.நகரில் தான் தங்க உள்ள விடுதியின் முகவரியை கொடுத்துள்ளார்.  இந்த நிலையில் சென்னை தி.நகரில் தற்போது தங்கியுள்ள பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரனுக்கு இன்று காலை தாம்பரம் போலீசார் நேரில் சென்று சம்மன் அளிக்க உள்ளனர்.

4 கோடி ரூபாய் யாருடைய பணம்.? வெளியான எப்ஐஆர்.!! நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்.. சம்மன் அனுப்பிய போலீஸ்

click me!