பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அம்ஸ்ட்ராங் இறந்தது முதல் இறுதிச் சடங்குவரை உடன் இருந்த பா.ராஞ்தி, நள்ளிரவில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதன் மூலம் அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பா.ரஞ்சித், பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவராகிறாரா என்ற கேள்வியை எழ வைத்திருக்கிறது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை ரவுடி கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆமஸ்ட்டராங் இறப்புச் செய்தி கேட்டு முதல் ஆளாக ஓடி வந்த இயக்குனர் பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங்க் முகத்தை கண்டதும் கதறி அழத் தொடங்கினார்.
ஆம்ஸ்ட்ராங் வரலாறு
கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே தீவிர அரசியல் ஈடுபட்டு வந்த ஆம்ஸ்ட்ராங், டாக்டர் அம்பேத்கரிய கொள்கைகளில் ஆர்வம் கொண்டு தீவிர அரசியலில் நுழைந்தார். பின்னர், 2000 ஆண்டு தொடக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சென்னை அமைந்கரையில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியுடன் இணைத்துக் கொண்டார். அதற்கு பிறகு சுமார் 17 ஆண்டுகளாக தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவராக பதவி வகித்து வந்தார்.
ஏழைஎளிய மக்கள் நலனில் அக்கரை கொண்ட ஆம்ஸ்ட்ராங், நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களை உருவாக்கியிருக்கிறார். இதுவே மக்கள் மத்தியில் அவரை கவனம் பெற வைத்தது. இதன் காரணமாக சுயேட்சையாக போட்டியிட்ட ஆம்ஸ்ட்ராங் சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அவர் படு கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை முதல் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை இயக்குனர் பா. ரஞ்சித் கண்ணீர் மல்கவே காட்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? ஆம்ஸ்ட்ராங் கொலையை சுட்டிக்காட்டி திமுக அரசை விளாசும் பா.ரஞ்சித்!
பா.ரஞ்சித்துக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன தொடர்பு?
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் அரசியல் மூலம் அம்பேத்கரியத்தை பேசினார் என்றால், இயக்குனர் பா.ரஞ்சித் சினிமா திரைப்படங்கள் மூலம் அம்பேத்கரியத்தை பேசி வருகிறார். புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியின் சீடர்களாக கருதப்படும் பா.ரஞ்சித் மற்றும் ஆம்ஸ்ட்ராங் இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக பயணித்திருக்கின்றனர். பா.ரஞ்சித் முதுகலை பட்டம் பெறுவதற்கும், சினிமா துறையில் கால் பதிப்பதற்கும் மறைந்த ஆம்ஸ்ட்ராங் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார். இதன் காரணமாகவே ஆம்ஸ்ட்ராங்கின் இறுதிச்சடங்கு நிகழ்வு வரை கூடவே இருந்த பா. ரஞ்சித் நள்ளிரவில் ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த அறிக்கையில் ஆளும் திமுக அரசுக்கு 7 கேள்விகளை முன்வைத்தார். அதுதான் இப்போது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
undefined
இதையும் படிங்க: Armstrong Murder News: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்? வெட்டிய விதத்தை பார்த்தா இவங்களா இருக்குமோ?
அடுத்த தலைவர் பா.ரஞ்சித்?
இதனிடையே, தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தெடுக்க ஒரு பிரபலமான முகம் மற்றும் அதே கொள்கை பிடிப்பு தேவைப்படும் பட்சத்தில், ஆம்ஸ்ட்ராங்கின் கனவை பா.ரஞ்சித் முன்னெடுத்துச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.