ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்து வந்த ரவுடியை 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் கொலைகள்
அதிமுக நிர்வாகிகள் கொலை, பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு, ஆம்ஸ்ட்ராங் கொலை என தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்தநிலையில் தஞ்சாவூரில் பரபரப்பு மிகுந்த சாலையில் ரவுடியை முன் விரோதம் காரணமாக மர்ம கும்பல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை அடுத்த களிமேடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் இவரது மகன் ஸ்ரீராம் (27), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாதாக்கோட்டை பை சேர்ந்த ரவுடி சின்னா (எ) பிரின்ஸ் லாரா கொலை செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீராம் முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது.
Crime: சிறை செல்வது உறுதி; 1 இல்ல 2 கொலையா செஞ்சிட்டு பொயிடலாம் - திருச்சியில் பரபரப்பு சம்பவம்
நடுரோட்டில் ரவுடி வெட்டிக்கொலை
இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை மங்களபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஜிகர்தண்டா கடையில் கொலை குற்றவாளி என்பதை மறைத்து அப்பாவி போல் ஸ்ரீராம் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் முன் விரோதம் மற்றும் கொலைக்கு பழிக்கு பழி வாங்க திட்டமிட்ட கும்பல் ஶ்ரீராம் வேலை பார்க்கும் கடை பகுதியை நோட்டமிட்டது. நேற்று இரவு கடையில் வேலை பார்த்து கொண்டு இருந்த ஸ்ரீராமை வெட்ட மர்ம கும்பல் திடீரென கடைக்குள் புகுந்தது. இதனை பார்த்த ஶ்ரீராம் அலறியவாறு கடையில் இருந்து தாவி குதித்து சாலையில் இறங்கி ஓடி உள்ளார். அங்கு இருந்தவர்கள் எதற்கு ஓடுகிறார் என பார்ப்பதற்குள் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஸ்ரீராமை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
பழிக்கு பழி கொலையா.?
கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் நேரில் விசாரணை நடத்தினார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான சாலையில் கொலை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடியை கொலை செய்த கொலையாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். பழிக்கு பழியாக இந்தக் கொலை நடந்து இருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் திடீர் இடமாற்றத்திற்கான பின்னணி என்ன? வெளியான தகவல்