நீலகிரியில் காவல் எஸ்.பி.யின் மனைவி வந்த கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அல்தாஃப் மற்றும் ஜுனைத் ஆகிய இரண்டு வாலிபர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம், குன்னூர் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். கல்லார் அருகே சென்ற போது எதிரே நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலின் மனைவி வந்த கார் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
undefined
இந்த விபத்தில் இருசக்கர வாகனம் சேதமடைந்ததுடன் அதில் பயணித்த அல்தாப் மற்றும் ஜுனைத் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும் விபத்துக்குள்ளான இருசக்கர வாகனமும் தீ பற்றி எரிந்தது. நீலகிரி காவல் கண்காணிப்பாளர் மனைவி வந்த காரும் சேதம் அடைந்தது.
இதனை அடுத்து காயம் அடைந்த இரண்டு வாலிபர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சுக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அல்தாஃப் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
மேலும் ஜூனைத்ம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.