தொடரும் கனமழை.. இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

By Ramya s  |  First Published Jul 1, 2024, 8:49 AM IST

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2 மாதங்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வந்தனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் ஊட்டியில் கூட இந்த ஆண்டு 28 டிகிரி செல்சியல் வெயில் பதிவானது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. 

இந்த சூழலில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து ஓரளவுக்கு மக்களுக்கு நிவாரணம் கிடைத்தது. இதனிடையே கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்துவருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 29-ம் தேதி நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 278 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் ஊட்டி மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டு கடந்த சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. 

Latest Videos

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்குப்போகுதாம் மழை.. சென்னையின் நிலை என்ன? வானிலை மையம் தகவல்!

நேற்றும் நீலகிரியில் கனமழை பெய்தது. குறிப்பாக பந்தலூரில் 70 மி.மீ அளவுக்கு கனமழை பெய்தது. இன்றும் நீலகிரியில் கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஜூலை 6 வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cylinder Price : குட் நியூஸ்.. சமையல் எரிவாயு விலை குறைந்தது..! எவ்வளவு தெரியுமா.?

அதே போல் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பனதலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். 
 

click me!