- Home
- Gallery
- Armstrong Murder News: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்? வெட்டிய விதத்தை பார்த்தா இவங்களா இருக்குமோ?
Armstrong Murder News: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்? வெட்டிய விதத்தை பார்த்தா இவங்களா இருக்குமோ?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என எழுந்து வரும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கைதானவர்கள் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Armstrong Murder
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்து வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச்செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Arcot Suresh Gangs
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு (39), திருமலை (45), மணிவண்ணன் (25), திருவேங்கடம் (33), ராமு (38), சந்தோஷ் (32), அருள் (33), செல்வராஜ் (48) ஆகிய 8 பேர் சரணடைந்தனர். சனிக்கிழமை இரவு பூந்தமல்லி கோகுல் (25), விஜய் (19), சிவசக்தி (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசாரின் விசாரணையில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையும் படிங்க: தலைநகரை கதி கலங்க வைத்த ஆற்காடு சுரேஷ்? இவரை கொலை செய்தது யார்? ஆம்ஸ்ட்ராங்கிற்கு என்ன தொடர்பு?
Armstrong Murder Reason
ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என திருமாவளவன், செல்வபெருந்தகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறிவருகின்றனர். இதனிடையே ஆற்காடு சுரேஷுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை பயன்படுத்தி வேறு சில ரவுடிகளும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மறைமுகமாக ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க: BSP Party Armstrong Murder Case: தலைநகரை அலறவிட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்! சரணடைந்த 8 பேர் யார் தெரியுமா?
Police investigation
குறிப்பாக அவர் கொலை செய்யப்பட்ட விதம் தென் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படை கும்பல் கொலை செய்வது போல உள்ளது என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக கழுத்தில் வெட்டிவிட்டு, அவர் ஓடக்கூடாது என்பதற்காக காலில் வெட்டி, அவர் தங்களை தாக்கக்கூடாது என்பதற்காக கையில் வெட்டி, அதன் பிறகு சரமாரியாக தொடர்ந்து அவரை வெட்டியது போலீசாருக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கைதானவர்கள் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.