Mullaperiyar : கேரளாவிற்கு செக் வைத்த தமிழகம்.! சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து

By Ajmal Khan  |  First Published May 28, 2024, 8:55 AM IST

முல்லை பெரியார் அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட கேரளா அரசு திட்டமிட்டு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக இன்று நடைபெற இருந்த மத்திய அரசின்  சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 


முல்லை பெரியாருக்கு மாற்று அணை

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லையென கூறி,  மாற்றாக  புதிய அணை கேரள மாநிலம், பீர்மேடு தாலுகா, பெரியார் கிராமத்தில் அமைக்க கேரளா அரசு திட்டமிட்டது. இந்த இடம் வண்டிப்பெரியாரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. தற்போது இருக்கும் அணையிலிருந்து 1200அடி கீழ்திசையில் புதிய அணையைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கேரள அரசு புதிய அணை கட்டினால் தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள முல்லை பெரியார் அணை கையை விட்டு செல்லும் நிலை உருவாகும் இதனால் தென் மாவட்டத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

Tap to resize

Latest Videos

சிலந்தி ஆற்றை தொடர்ந்து முல்லை பெரியாரை டார்கெட் செய்யும் கேரளா.. புதிய அணை கட்டினால் பாதிப்பு என்ன.?

தமிழகம் கடும் எதிர்ப்பு

இந்தநிலையில், முல்லை பெரியார் அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி 05.02.2024 இல் கேரள அரசின் நீர்வளத்துறை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்திருந்தது. இதற்கான இந்த விண்ணப்பத்தை இன்று மே 28 தேதி பரிசீலனைக்காக மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பட்டியலிட்டிருந்தது. இந்த தகவல் வெளியானதையடுத்து அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மத்திய அரசுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

அதில், கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கை ஆகியவை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ரத்து

மேலும், எனவே, 28-5-2024 அன்று நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளினை நீக்கிடவும், எதிர்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்தவொரு கருத்துருவினையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என கேட்டிருந்தார். இந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக இன்று நடைபெற இருந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

முல்லைப் பெரியாற்றில் கேரளா புதிய அணை: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

click me!