மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாதி என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிவருகிறார்.
மீண்டும் கட்சியில் பொறுப்பு பெறவேண்டும் என்பதற்காக தமிழிசை இப்படி பேசுகிறாரா? என கே.சி.பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாதி என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிவருகிறார். மேலும், ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என்று சொல்வதற்கான காரணங்களையும் ஆதாரங்களுடன் அண்ணாமலை அடுக்கியுள்ளார். இந்நிலையில், மதத்தை முன்னிறுத்தி மதத்தின் பெயரால் அரசியல் செய்வதை ஜெயலலிதா என்றுமே ஆதரித்ததில்லை என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆளுங்கட்சி தான் இப்படி இருக்குதுன்னா! எதிர்க்கட்சி அதுக்கு மேல! அரசியல் செய்யத்தெரியாத இபிஎஸ்! கே.சி.பழனிசாமி!
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்:
* "கரசேவையை ஆதரித்தது.
* கரசேவையை காரணம் காட்டி பாஜக ஆட்சி கவிழ்க்கப்பட்ட பொழுது இது தவறு என்று குரல்கொடுத்து.
* ராமர் கோவில்க்கு ஆதரவாக குரலில் கொடுத்தது.
* ராம சேதுவுக்கு ஆதரவு தெரிவித்தது.
* இன்று உயிரோடு இருந்திருந்தால் ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டு இருப்பார்."
இது எல்லாம் இறைபக்தி. இது வேறு மதவாத அரசியல் என்பது வேறு. மதத்தை முன்னிறுத்தி மதத்தின் பெயரால் அரசியல் செய்வதை ஜெயலலிதா அம்மா என்றுமே ஆதரித்ததில்லை.
அதனுடைய வெளிப்பாடுதான் மத்தியில் ஆளுகிற அரசாங்கங்கள் மாநில அரசாங்கங்களை கவிழ்த்த வரலாறு உண்டு. ஆனால் மாநில கட்சியான அதிமுக மத்தியில் ஆண்ட வாஜ்பாய் அரசாங்கத்தை கவிழ்த்தது. அதை செய்தவர் ஜெயலலிதா அம்மா.
அதன்பின் ஒரு பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் "நான் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் அதற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் இனி மேல் எந்நாளும் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று உங்களிடம் எனது வாக்குறுதியாக கொடுக்கிறேன்" என்று கூறினார். "மோடியா? லேடியா?" என்று களம் கண்டார்.
இதையும் படிங்க: இபிஎஸ் பொதுச்செயலாளர் அறிவிக்கப்பட்டதும் மனசுல எம்ஜிஆர் நினைப்போ? எதுக்கு இந்த போலி வேடம்? கே.சி.பழனிசாமி!
அரசியல் அரிச்சுவடி அறியாத அண்ணாமலை இப்படி சொல்லி இருக்கலாம் ஆனால் ஒரு அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்த திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் ஒருவேளை தான் சார்ந்து இருக்கிற கட்சிக்கு அதன் மாநில தலைவரை ஆதரித்துப் பேச வேண்டும் என்பதற்காக இப்படி பேசுகிறாரா? அல்லது மீண்டும் கட்சியில் பொறுப்பு பெறவேண்டும் என்பதற்காக இப்படி பேசுகிறாரா? என கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.