சிவகங்கை அருகே 4 மாத குழந்தை இறந்து புதைக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக தாய், தந்தை சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் உட்பட மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). இவர் கோவையில் தேனீர் கடையில் வேலை பார்த்தபோது தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நாகர்கோவிலைச் சேர்ந்த மஞ்சுவை (25) காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு முனீஸ்வரன் என்ற 4 மாத குழந்தை இருந்தது.
கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் கடந்த 20-ம் தேதி சொந்த ஊரான நாட்டகுடிக்குச் சென்றுள்ளனர். அங்கு மர்மான முறையில் இறந்த அவர்களது குழந்தையை, யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டதாக திருப்பாச்சேத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
undefined
நெல்லையில் உச்சக்கட்ட பதற்றம்; தீபக் ராஜாவின் உடலை சூழ்ந்த ஆதரவாளர்கள் - குவிக்கப்பட்ட போலீஸ் படை
இதையடுத்து சந்திரசேகரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சம்பவதன்று தனது மனைவி மஞ்சு சிவகங்கைக்கு குழந்தையுடன் சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது குழந்தையை நாட்டாக்குடி கட்டப்புலி கோயில் அருகே கட்டப்பையில் வைத்துவிட்டு, நாகர்கோவில் சென்றுவிட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அங்கு சென்றுபார்த்தபோது குழந்தை இறந்து கிடந்தது. தனது தாயார் காளிமுத்துவுடன் சேர்ந்து குழந்தையின் உடலை மயானத்தில் புதைத்ததாக சந்திரசேகர் தெரிவித்தார். தொடர்ந்து புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் குழந்தை இறந்தது தெரியவந்தது.
கழிவு நீர் செல்வதில் தகராறு; பெண் உள்பட மூவரை கம்பு, கட்டையால் புரட்டி எடுத்த இளைஞர்கள்
இதையடுத்து போலீஸார் தொடர் விசாரணையில், குழந்தை பிறப்பில் சந்திரசேருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரும், மனைவியும் சேர்ந்து குழந்தையை தரையில் தூக்கி எறிந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சந்திரசேகர், மஞ்சு, அவர்களுக்கு துணையாக இருந்த காளிமுத்து ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.