மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்துக்கு இரவில் போகாதீங்க.. எச்சரிக்கை விடுத்த வனத்துறை !!

By Raghupati RFirst Published May 15, 2022, 3:45 PM IST
Highlights

தமிழ்நாட்டில் கண்யாகுமரி மாவட்டத்தில் ஆரம்பித்து கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் வரை  சங்கிலித்தொடர் போல் 1600 கி.மீ. தொலைவு வரை பரவிக் கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலையானது தென்னிந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது.

இந்தியாவின் 50 அணைக்கட்டுகள், 126  ஆறுகள், 29 நீர்வீழ்ச்சிகள், கொடைக்கானல், ஊட்டி, நீலகிரி, மூணாறு உள்ளிட்ட சர்வதேச கோடைவாழிடங்கள், பழநி முருகன் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட  புகழ்பெற்ற கோயில்கள் , ஆண்டு முழுவதும்  மழைப்பொழிவைக் கொடுக்கும் முள்புதர் காடுகள், புல்வெளிப் பிரதேசங்கள், சோலைக்காடுகள், பசுமைமாறா காடுகள் என பலவகையான அதிசயங்களை கொண்டுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதி மேற்கு தொடர்ச்சி மலையடி வார பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இரவுநேரங்களில் தோட்டங்களுக்கு தனியாகசெல்ல வேண்டாம் என களக்காடு முண்டந்துறை புலிகள்காப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை மாவட்ட களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், சார்பில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னெச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் மே முதல் ஜூலை மாதங்களில் பனம்பழம் ,வாழைப்பழம் மற்றும் கொல்லாம்பழம்  (முந்திரி) ஆகியவை விளையும் பருவம் என்பதால் வனவிலங்குகளான கரடி,நரி குரங்கு யானை போன்றவை களகாட்டை விட்டு வெளியேறிவிளைநிலங்களுக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் விவசாயிகள் யாரும் விளைநிலங்களில் இரவு நேரங்களில் தனியாகபடுத்து உறங்குதையோ தனியாக நடப்பதையோ முற்றிலும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இதற்காக தோட்டங்களில் வனவிங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், திருப்பிகாட்டிற்குள் அனுப்புவதற்காகவும் வனத்துறை தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட வனவிலங்குகளை தோட்டங்களில் பார்க்கும்பட்சத்தில் உடனடியாக வனச்சரகருக்கு தகவல் தெரிவிக்குமாறும் வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வில் மைனஸ் மார்க் இருக்கு.. மாணவர்கள் ஷாக்.! வெளியான அதிர்ச்சி தகவல் !

இதையும் படிங்க : தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. கோரிக்கை மனுவை அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின் !

click me!