பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. சாதித்து காட்டிய தென்காசி இளம்பெண்..

By Ramya s  |  First Published Apr 26, 2024, 10:59 PM IST

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த இன்பா யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 


மத்திய அரசு தேர்வாணயம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமை பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த இன்பா வெற்றி பெற்றுள்ளார். 

இன்பாவின் தந்தை பேருந்து நடத்துனராக இருந்து ஓய்வு பெற்றவர். தாய் பீடி சுற்றும் தொழிலாளியாக இருக்கிறார். மிக சாதாரண பின்புலத்தில் இருந்து வந்த இன்பா, செங்கோட்டை தாலுகாவில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

தமிழ்நாட்டில் இந்த நாட்களில் வெப்ப அலை உச்சத்தில் இருக்கும்.. பேட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்..

செங்கோட்டையில் இருந்தே தான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்ததாகவும், தனது படிப்பிற்கு செங்கோட்டை நூலகம் பெரிதும் உதவியாக இருந்ததாகவும் கூறியுள்ளார். யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நூலகத்தில் பல வசதிகள் செய்து கொடுத்ததாகவும் கூறி உள்ளார். 

பின்னர் சிவில் சர்வீஸின் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற உடன், தமிழக அரசின் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் தனக்கு முதன்மை தேர்வில் பங்கேற்கு ரூ.25000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாகவும் கூறினார். இதன் மூலம் சென்னையில் தங்கி தேர்வுக்கு தயாராகி வந்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற பிறகு நேர்முக தேர்வுக்கு தான் தயாராகி வந்ததாகவும் கூறி உள்ளார். 
தன்னை போன்ற கிராமப்புற மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வை கண்டு அஞ்சாமல், தொடர்ந்து முயற்சி எடுத்து படித்தால் வெற்றி பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

குடும்பத்துடன் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. சர்ச்சையில் சிக்குமா முதல்வர் பயணம்.?

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள இன்பாவுக்கு செங்கோட்டை நூலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மேலும் இன்பாவை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அவருக்கு பூங்கொத்து வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னை போன்ற கிராமப்புற மாணவர்களும் குடிமை பணி தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்பதை  நிரூபித்துள்ளார் இன்பா. 

click me!