பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி - திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் பாவூர்சத்திரம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. செங்கோட்டையில் இருந்து தென்காசி, பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம் திருநெல்வேலி வழியாக பயணிகள் ரயில்கள் மற்றும் செங்கோட்டை - ஈரோடு பாசஞ்சர் ரயில், திருநெல்வேலியில் இருந்து கொல்லம் மற்றும் பாலக்காடு செல்லும் ரயில்கள் மற்றும் செங்கோட்டை தாம்பரம் விரைவு ரயில் போன்ற ரயில்கள் பாவூர்சத்திரம் வழியாக இயக்கப்படுகின்றன.
நெல்லையில் தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறிப்பு
இதனால் இந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் இன்று ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பயணிகள் நிழல் கூரையில் சுமார் 1.30 மணியளவில் வாலிபர் தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதாக பயணி ஒருவர் காவல்நிலையத்திற்கும், ரயில் நிலைய அதிகாரிக்கும் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் விரைந்து வந்த தென்காசி இருப்பு பாதை காவல் நிலைய அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உயிரிழந்த வாலிபர் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் காளிராஜா (வயது 25) கட்டிட தொழிலாளி என்பது தெரியவந்தது.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு சம்பவம்; தலையில் கல்லை போட்டு ஒருவர் கொடூர கொலை
இவர் இன்று காலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு மதிய உணவையும் எடுத்துக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு செல்லாமல் பாவூர்சத்திரம் ரயில் நிலையம் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு ரயில் பயணிகள் நிழல் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்துள்ளது. காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.