இபிஎஸ்..? ஓபிஎஸ்.? யார் கை ஓங்கும்.. பொதுக்குழு தீர்மானம் செல்லுமா.. நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லுமா? செல்லாதா என உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை நடைபெறவுள்ளது. இதனையடுத்து தான் பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஓபிஎஸ்- இபிஎஸ் மோதல்

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடந்த மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து அ.தி.மு்க பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்,  என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொதுக்குழுவை நடத்தலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு,  எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார்.மேலும்  சிறப்பு தீர்மானமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கவும் பட்டனர். 

Latest Videos

செந்தில் பாலாஜி,சேகர்பாபுக்கு எல்லாம் அமைச்சர் பதவி.! நினைச்சியிருந்தா எப்பவோ அமைச்சராகி இருப்பேன்-வேல்முருகன்

தீர்மானம் செல்லாது

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு கடந்த ஜூலை 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில்,"கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.  இதனால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும்  பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்  எனவும் கோரப்பட்டிருந்தது. அதன் படி கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது அதிமுகவில்  தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்த நீதிபதி அதிமுக பொதுக்குழு வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என தெரிவித்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து திமுகவிற்கு பணம்..! எவ்வளவு வருகிறது தெரியுமா..? பகீர் கிளப்பிய இபிஎஸ்

நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மேலும் இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் 3 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் கூறினர். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதனையடுத்து தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு திங்கட்கிழமை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு.கிருஷ்ணகுமார் ஆஜராகவில்லை என்றும், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க டெல்லியிலிருந்து வழக்கறிஞர் வர வேண்டும், எனவே  அவர் ஆஜராகததால், வழக்கை வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.. இதனையடுத்து இன்று முதல் நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் அதிமுக பொதுக்குழு நடத்தியது செல்லுமா? செல்லாதா? என விசாரணை நடைபெறவுள்ளது.இந்த விசாரணை முடிவில்  ஓபிஎஸ் கை ஓங்குகிறதா..? இபிஎஸ் கை ஓங்குகிறதா?  என தெரியவரும். 

இதையும் படியுங்கள்

அதிமுக பொதுக்குழு செல்லுமா..? செல்லாதா..? புதிய நீதிபதி முன்னிலையில் தொடங்குகிறது விசாரணை

 

click me!