
தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இன்று நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்தில், சுமார் 200க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
மேலும் படிக்க:அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பிக்களுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை.. என்ன தெரியுமா..?
ஏற்கனவே ஜவுளித்துறையில் நூல் விலை உயர்வை கண்டித்து, ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர்கள் கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். இதனிடையே ஜிஎஸ்டி, பணமதிப்பழிப்பு, நூல் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டு வரக்கூடிய சூழ்நிலையில், தமிழக அரசு அறிவித்த 32 சதவீத மின் கட்டணம் உயர்வு காரணமாக மீண்டும் விசைத்தறி தொழில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக விசைத்தறி உரிமையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க:75 வது சுதந்திர தின விழா.. அனைவரது வீட்டிலும் தேசியக்கொடி.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..
விசைத்தறிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை அரசு மானியமாக வழங்க வேண்டும் எனவும், இதனை வலியுறுத்தி தமிழக விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை விரைவில் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் கவனஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.