ADMK vs DMK : நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார்.! நீங்கள் தயாரா.? திமுக அமைச்சருக்கு சவால் விடுத்த தங்கமணி

By Ajmal KhanFirst Published Jul 24, 2024, 12:36 PM IST
Highlights

உதய் மின் திட்டத்தால் தமிழகத்துக்கு நம்மை தான் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி, உதய் மின் திட்டம் குறித்து தமிழக மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார். அவர் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 
 

மின்சார கட்டணம் உயர்வு- அதிமுக போராட்டம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு தமிழகத்தின் மின் கட்டணம் உயர்த்தி திமுக அரசு அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.திமுக அரசின் செயல்பாட்டை கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டம் தொடர்பாக  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வுக்கு அ.தி.மு.க.வே காரணம். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல அ.தி.மு.க. செயல்பாடு உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்க மறுத்த உதய் மின் திட்டத்தில் தமிழ்நாட்டை இணைத்து கையெழுத்திட்டது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் என விமர்சித்திருந்தார். 

Latest Videos

Budget 2024: பட்ஜெட்டில் இவ்வளவு பாரபட்சம் ஏன்? INDIA கூட்டணி எம்.பி.க்கள் போர்க்கொடி!

உதய் திட்டத்தில் கையெழுத்திட்டது ஏன்.?

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக ஆட்சி காலத்தில் மின் துறை அமைச்சராக இருந்த தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உதய் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாய மற்றும் குடிசை மின் நுகர்வோர்களுக்கு மின் மீட்டர் பொருத்தப்பட மாட்டாது , வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் , கைத்தறி மற்றும் விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் , காலாண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்தப்படாது,  அதனால் ஏற்படும் நஷ்டத்தை மாநில அரசே ஈடு செய்யும் போன்ற உத்திரவாதங்களை பெறப்பட்ட பிறகே உதய் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த அதிமுக கையெழுத்திட்டதாக கூறியுள்ளார். 

கடன் சுமை குறைந்துள்ளது

மேலும் தமிழ்நாட்டில் உதய் மின் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் கடன் சுமை குறைக்கப்பட்டது, அதிக வடிக் கடன் திரும்ப செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட வட்டி சேமிப்பு,  நிலக்கரி ஒதுக்கீடு , மத்திய அரசு நிதி நிறுவனங்களிடமிருந்து குறைந்த வட்டியில் பெறப்பட்ட கடன் ஆகியவற்றால் ஆண்டுக்கு சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பு  ஏற்படும் என்று கணக்கிடப்பட்டு திட்டத்தை செயல்படுத்தியதாகவும்,  இன்றைய அளவில் மின் பகிர்வான கழகம் உயிர்ப்போடு செயல்படுவதற்கு உதய் திட்டம் தான் காரணம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா.?

மேலும் அந்த அறிக்கையில், உதய் மின் திட்டத்தினால் ஏற்பட்ட நன்மைகளையும் தமிழக மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பதையும் தற்போது மின் கட்டணம் உயர்வு தேவை இல்லை என்பதையும் மின்சார துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு அவர்கள் குறிப்பிடும் நாளில் அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருக்கிறேன் அவர் தயாரா என தங்கமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

மூன்றாண்டு ஆட்சிக்குப் பிறகும், மூன்று முறை கடுமையான மின்கட்டணத்தை உயர்த்திய பிறகும், தங்களது நிர்வாகத் திறமையின்மை காரணமாக தமிழ் நாடு மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்க முடியாமல் உள்ளதை மறைக்க, எங்கள் மீது பழிபோடுவதை விட்டுவிட்டு, இனியாவது தமிழ் நாடு மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

Annamalai: காங்கிரஸ் பட்ஜெட்டில் 6ஆண்டுகள் தமிழ்நாடு பெயர் இடம்பெறவில்லையே.!ஸ்டாலினுக்கு எதிராக சீறிய அண்ணாமலை

click me!