மயிலாடுதுறையை சேர்ந்த காளிதாஸ்(55). இவர் சென்னை அடுத்துள்ள ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் பணியாற்றி வந்தார். வழக்கல் போல விமானப்படை பயிற்சி மையத்தில் 8வது டவரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
சென்னை ஆவடி விமானப்படை பயிற்சி மைய 8வது டவரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்த காளிதாஸ்(55). இவர் சென்னை அடுத்துள்ள ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் பணியாற்றி வந்தார். வழக்கல் போல விமானப்படை பயிற்சி மையத்தில் 8வது டவரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து சக வீரர்கள் வந்து பார்த்த போது காளிதாஸ் தொண்டையில் 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையும் படிங்க: ஷாக்கிங் நியூஸ்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை! என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
இந்த சம்பவம் தொடர்பாக முத்தா புதுபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காளிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த காளிதாஸ்க்கு ஜீவஸ்ரீ என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.